தமிழக அரசின் அறிவிப்பால் அதிரடி முடிவெடுத்த Tik Tok செயலி.

கடந்த வாரம் தமிழக அரசு சட்டப்பேரவையில் தகவல் தொழில்நுட்ப துரை அமைச்சர் மணிகண்டன் பேசும்போது சமூக சீர்கேட்டிற்கு வழி வகுக்கும் Tik Tok செயலியானது கூடிய விரைவில் மத்திய அரசு உதவியுடன் தடை செய்யப்படும் என அறிவித்திருந்தார்.

இந்த நிலையில் TikTok நிர்வாகம் அதிரடி முடிவு ஒன்றை எடுத்துள்ளது. பொழுதுபோக்கு நோக்கத்துடன் உருவாக்கப்பட்ட TikTok செயலியில் இனி விதிமுறைகள் மீறி பதிவிடும் வீடியோக்கள் மற்றும் சமூக வழிகாட்டுதலை மீறும் வீடியோக்கள் மீது புகார் அளித்தால் அந்த வீடியோக்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என Tiktok நிர்வாகம் அறிவித்துள்ளது.

கடந்த சில மாதங்களாகவே TikTok செயலியை தடை செய்ய வேண்டும் என பல அரசியல்வாதிகளும் சமூக ஆர்வலர்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் வீடியோ வடிவில் எங்களுடைய பதிவுகள் உங்களுக்கு வந்து சேர யூட்யூபில் TECH POST சேனலை Subscribe செய்து கொள்ளுங்கள். இந்தப் பதிவானது உங்களுக்குப் பிடித்திருந்தால் கீழ்காணும் ஷேர் பட்டனை அழுத்தி உங்களுடைய நண்பர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *