Sun Direct மற்றும் Tatasky ல் நெட்வொர்க் Capacity Fee (NCF) இனி கிடையாது.

தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் TRAI இன் புதிய விதிமுறைப்படி கேபிள் மற்றும் டிடிஎச் உபயோகிக்கும் வாடிக்கையாளர்கள் தங்களுக்கு விருப்பப்பட்ட சேனல்களை மட்டும் தேர்வு செய்து கொள்ளலாம் மேலும் அதற்கான பணத்தை மட்டும் செலுத்தினால் போதும் என கடந்த மாதம் அறிவித்திருந்தது.

இதன்படி 100 இலவச சேனல்கள் கொடுக்கப்படும் இந்த சேனல்களுக்கான நெட்வொர்க் Capacity Fee ரூபாய் 130 செலுத்த வேண்டும் என அறிவித்திருந்தது. மேலும் அதன்பிறகு வாடிக்கையாளர்கள் தேர்வு செய்யும் ஒவ்வொரு 25 சேனல்களுக்கும் அந்த சேனல்களுக்கான கட்டணத்தை தவிர கூடுதலாக ரூபாய் 20 செலுத்த வேண்டும் என அறிவித்திருந்தது.இந்த ஒவ்வொரு 25 சேனல்களுக்கும் செலுத்த வேண்டிய 20 ரூபாய் நெட்வொர்க் Capacity Fee எனவும் அறிவித்து இருந்தது.

இந்த நிலையில் Sun Direct மற்றும் Tatasky போன்ற நிறுவனங்கள் தங்களின் வாடிக்கையாளர்களை தக்கவைப்பதற்காக கூடுதலாக செலுத்த வேண்டிய அந்த நெட்வொர்க் Capcity Fee – ணை தற்பொழுது தள்ளுபடி செய்துள்ளது. இதன்படி முதல் 100 இலவச சேனல்களுக்கான Network Capacity Fee Rs.130 செலுத்த வேண்டும் மேலும் அதன் பிறகு தேர்வு செய்யும் கட்டண சேனல்களுக்கான கட்டணத்தை மட்டும் கட்டினால் போதும் என அறிவித்துள்ளது.

மேலும் வீடியோ வடிவில் எங்களுடைய பதிவுகள் உங்களுக்கு வந்து சேர யூட்யூபில் TECH POST சேனலை Subscribe செய்து கொள்ளுங்கள். இந்தப் பதிவானது உங்களுக்குப் பிடித்திருந்தால் கீழ்காணும் ஷேர் பட்டனை அழுத்தி உங்களுடைய நண்பர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்.

, , , ,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *