TCCL Set top Box பயன்படுத்துகிறீர்களா? இனி இவ்வளவு பணம் செலுத்தினால்தான் உங்களுக்கு சேனல் வரும்.

தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆனது கடந்த மாதம் கேபிள் மற்றும் செட்டாப் பாக்ஸ் வாடிக்கையாளர்களுக்காக வரைமுறைகளை கொண்டுவந்திருந்தது. இதன்படி வாடிக்கையாளர்களே அவர்கள் பார்க்கும் சேனல்களை தேர்வு செய்துகொள்ளலாம் மற்றும் அதற்கான கட்டணத்தை மட்டும் செலுத்திக் கொள்ளலாம் என்று வரைமுறைகளை கொண்டுவந்திருந்தது. இதனை பிப்ரவரி 1 முதல் அமல்படுத்தியிருந்த நிலையில், ஏராளமான சந்தாதாரர்களின் கோரிக்கையை ஏற்று இந்த விதிமுறைகளை அமல்படுத்துவதற்கான கால அவகாசத்தை மார்ச் 31 வரை TRAI நீட்டித்து உள்ளது

அதன்படி தற்பொழுது TCCL Set Top Box பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கான கட்டண விவரங்களை அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

இதன்படி அந்நிறுவனமே தங்களது வாடிக்கையாளர்களுக்காக பரிந்துரை (Suggestion) Plan – களை வழங்குகிறது. இந்த Plan – ல் கிட்டத்தட்ட தற்பொழுது நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கும் அனைத்து சேனல்களும் உள்ளடக்கம். நீங்கள் செலுத்த வேண்டிய கட்டணம் மாதத்திற்கு Rs.280 (SD) , Rs. 380 (HD). இந்த சேனல் விவரங்களை கீழ்க்காணும் Link – ல் சென்று பெற்றுக் கொள்ளலாம்
(Plan (SD) – Rs.280/- Channel List Download).
(Plan (HD) – Rs.380/- Channel List Download)

மேலும் மேற்கண்ட Plan – ல் உங்களுக்கு விருப்பம் இல்லை எனில் உங்களுக்கென விருப்பமுள்ள சேனல்களை மட்டும் தேர்வு செய்வதற்கான படிவத்தினை வழங்குகிறது. இதில் உங்களுக்கு பிடித்த சேனல்களை மட்டும் தேர்வு செய்து உங்களுடைய கேபிள் ஆப்ரேட்டரிடம் கொடுக்கும் பட்சத்தில் அந்த சேனல்களுக்கான கட்டணத்தை மட்டும் செலுத்திக் கொள்ளலாம். இந்த படிவத்தினை கீழ்காணும் லிங்கில் சென்று Download செய்து கொள்ளலாம். (Channel Selection Form Download)

மேலும் வீடியோ வடிவில் எங்களுடைய பதிவுகள் உங்களுக்கு வந்து சேர யூட்யூபில் TECH POST சேனலை Subscribe செய்து கொள்ளுங்கள். இந்தப் பதிவானது உங்களுக்குப் பிடித்திருந்தால் கீழ்காணும் ஷேர் பட்டனை அழுத்தி உங்களுடைய நண்பர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *