Bulk SMS தொழில் தொடங்குவது எப்படி ?

அனைத்து நண்பர்களுக்கும் வணக்கம் இப்பதிவில் Bulk SMS தொழில் எப்படி தொடங்குவது என விரிவாக பார்ப்போம்.

Bulk SMS என்றால் என்ன?

Bulk SMS என்பது குறைவான நேரத்தில் அதிகமான வாடிக்கையாளர்களை SMS மூலம் தொடர்பு கொள்வதற்காக உருவாக்கப்பட்டவையாகும். இந்த Bulk SMS ஆனது பல்வேறு இடங்களில் உபயோகப்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக வங்கிகள் , வணிக வளாகங்கள், பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மேலும் பல அலுவலகங்களிலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதனை WEB SMS என்றும் அழைக்கலாம். ஏனெனில் இந்த SMS அனுப்புவதற்கு உங்களுக்கு சிம் கார்டு , மொபைல் எண் மேலும் மொபைல் நெட்வொர்க் போன்றவை தேவைப்படுவதில்லை. இந்த SMS அனுப்புவதற்கு உங்களது கணினி மட்டுமே போதுமானது.

Bulk SMS வகைகள்

Bulk sms இரண்டு வகையாக உள்ளது ஒன்று Promotional SMS மற்றொன்று Transaction SMS. Promotional SMS ஆனது ஒரு குறிப்பிட்ட தயாரிப்புகளை மற்றும் வேலைகளை Promote செய்வதற்காக உபயோகப்படுத்தப்பட்டு வருகிறது. இந்த Promotional SMS ஆனது DND – Register செய்து இருக்கும் மொபைல் எண்ணுக்கு செல்லாது.
அடுத்ததாக Transaction SMS. இந்த SMS ஆனது வங்கிகள் , பள்ளி , கல்லூரிகள் , அலுவலகங்கள் மேலும் Web Portal போன்றவற்றில் பயன்படுத்தப்பட்டு வருகிறது இந்த SMS ஆனது அனைத்து வித மொபைல் எண்ணுக்கும் (Including DND Register Mobile) உடனடியாக செல்லும் வகையில் உள்ளது.

Bulk SMS தொழிலை தொடங்குவது எப்படி?

இணைய தளங்களில் பல்வேறு BULK SMS Resellers இருக்கின்றனர். இவர்களிடமிருந்து ஒரு குறிப்பிட்ட SMS Credit வாங்கி நீங்கள் அதனை Resale செய்யலாம்.
இந்த Bulk SMS வாங்கும்பொழுது உங்களுக்கென தனிப்பட்ட Reseller Panel கொடுக்கப்படும். மேலும் ஒரு குறிப்பிட்ட IP Address வழங்கப்படும்
(Eg : 192.168.1.127) இதில் நீங்கள் Unlimited வாடிக்கையாளர்களை உருவாக்க முடியும். உங்களுடைய வாடிக்கையாளர்களின் SMS Credit Validity , Amount போன்றவற்றை நீங்களே Customize செய்து கொள்ளலாம்.

லாபம் எவ்வளவு?

Buying Cost – 1 Lakh SMS – 15,000/- (Per SMS Cost 15 Paise)
Domine Cost – Rs.200 (If Need)
Total Investment – Rs.15,200/-
=========================
Selling Cost – 1 SMS – 25-35 Paise (பயனாளர்களின் தேவைக்கேற்ப)
Profit – 10000 to 25000 (1 Lakh SMS)

மேலும் உங்களுடைய பயனாளர்களை தக்க வைப்பதன் மூலம் இதில் lifetime Income – வரவும் வாய்ப்பு இருக்கிறது. ஏனெனில் உங்களுடைய பயனாளர்களின் SMS Credit முடிவடைந்த பிறகு அதனை Recharge செய்ய உங்களிடம் தான் வரவேண்டும்.

எங்கு வாங்கலாம்?

இணையதளங்களில் பல்வேறு Bulk SMS வலை தளங்கள் இருக்கின்றன. இதில் நாங்கள் உபயோகப்படுத்தும் Bulk SMS நிறுவனத்தை கீழே குறிப்பிட்டுள்ளோம்.

www.gmrsolutions.in
www.tvsonline.in

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *