ரிலையன்ஸ் ஜியோ நிறுவனமானது இந்திய தொலைத்தொடர்பு சந்தையில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது என்று சொன்னால் மிகையாகாது.
ஏனெனில் தற்போது நாம் உபயோகிக்கும் இன்டர்நெட் மற்றும் வாய்ஸ் கால் மிக குறைந்த விலையில் கிடைக்கிறது எனில் அதற்கு மிக முக்கிய காரணம் ரிலையன்ஸ் ஜியோ வின் வருகை. இதனால் பொதுமக்களிடையே ரிலையன்ஸ் நிறுவனமானது நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.
இந்த நிலையில் தற்போது ரிலையன்ஸ் நிறுவனம் ஆனது வீடியோ Streaming மார்க்கெட்டிலும் இறங்க உள்ளது. மேலும் குறைந்த விலையில் வீடியோ Stream செய்துகொள்ளலாம் எனவும் அறிவித்துள்ளது. ஏற்கனவே ரிலையன்ஸ் ஜியோ நிறுவனமானது டிவி சேனல்களை தனது செயலின் மூலம் இலவசமாக கொடுத்து வருகின்றது.

இதனால் அமேசான் பிரைம் , Netflix , Hotstar போன்ற நிறுவனங்களுக்கு ஆப்பு வைக்கும் விதமாக தற்போது ரிலையன்ஸ் நிறுவனம் இந்த மார்க்கெட்டில் இறங்க உள்ளது.
இதன்மூலம் ஆயிரக்கணக்கான வீடியோக்கள் , படங்கள் , பாடல்கள் மற்றும் டிவி சேனல்களை குறைந்த விலையில் காண இயலும் என அந்நிறுவனம் கூறியுள்ளது.
மேலும் வீடியோ வடிவில் எங்களுடைய பதிவுகள் உங்களுக்கு வந்து சேர யூட்யூபில்
TECHPOST சேனலை Subscribe செய்து கொள்ளுங்கள். இந்தப் பதிவானது உங்களுக்குப் பிடித்திருந்தால் கீழ்காணும் ஷேர் பட்டனை அழுத்தி உங்களுடைய நண்பர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்.