TATA SKY – தங்களது வாடிக்கையாளர்களுக்கு புதிய விதிகளின்படி கட்டண சேனல்களை அமலுக்கு கொண்டு வந்துள்ளது.
தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் டிராய்
கடந்த மாதம் கேபிள் மற்றும் டிடிஎச்சில் புதிய வரைமுறைகளை கொண்டுவந்திருந்தது. இதன்படி 100 இலவச சேனல்களை தேர்வு செய்து கொள்ளலாம் இதற்கான கட்டணம் ரூபாய் 130 ஜிஎஸ்டி வரியுடன் சேர்த்து 153 ரூபாய் செலுத்த வேண்டும். மேலும் கூடுதலாக நாம் தேர்வு செய்யும் ஒவ்வொரு கட்டண சேனல்களுக்கும் அதற்கான கட்டணத்தை சேர்த்து கட்ட வேண்டும் என்ற அறிவிப்பினை வெளியிட்டிருந்தது. இதனை வரும் பிப்ரவரி 1 முதல் செயல்படுத்த வேண்டும் எனவும் உத்தரவிட்டிருந்தது.
இந்த நிலையில் TATA SKY டிடிஎச் நிறுவனமானது தற்போது TRAI –
ன் புதிய விதிகளின்படி வாடிக்கையாளர்களுக்கு கட்டண சேனல் விவரங்களை பட்டியலிட்டுள்ளது. இனி Recharge செய்யும் வாடிக்கையாளர்களும் புதிதாக DTH Connection வாங்குபவர்களுக்கும் இந்த புதிய விதிமுறைகள் பொருந்தும் என அறிவித்துள்ளது.
மேலும் வீடியோ வடிவில் எங்களுடைய பதிவுகள் உங்களுக்கு வந்து சேர யூட்யூபில் TECH POST சேனலை Subscribe செய்து கொள்ளுங்கள். கீழ்காணும் ஷேர் பட்டனை அழுத்தி உங்களுடைய நண்பர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்.