TNEB Bill கால்குலேஷன் எப்படி செய்கிறார்கள்?

TNEB Bill கால்குலேஷன் எப்படி செய்கிறார்கள்? என்பதை இந்த பதிவில் காணலாம்.

முதலில் TNEB Official Rate Slab – யை மேற்காணும் அட்டவணையின் மூலம் தெரிந்து கொள்ளுங்கள்.

இந்த அட்டவணையை காணும்போது சாதாரணமாக அனைவரும் பயன்படுத்தும் வீட்டு மின்சாரத்தின் கட்டணமானது நான்கு விதமான கணக்கிடு செய்யப்படுகிறது.

அதாவது 1 முதல் 100 யூனிட்டுகுள் உங்கள் வீட்டு கணக்கீடு வந்தால் எந்த கட்டணமும் வசூலிக்கப்படுவதில்லை.

200 யூனிட்டுகள் வந்தால் முதல் 100 யூனிட் இலவசம் மற்றும் 101 லிருந்து 200 யூனிட் வரைக்கும் ரூ.1.5 வசூலிக்கப்படுகிறது.

மேலும் 500 யூனிட்டுகள் உங்கள் வீட்டு மின்சார கணக்கீடு வந்தால்
முதல் 100 யூனிட் இலவசம். 101 லிருந்து 200 யூனிட் வரைக்கும் ரூ.2,
201 லிருந்து 500 யூனிட் வரைக்கும் ரூ.3 வரை வசூலிக்கப்படுகிறது.

500 யூனிட்டுக்கு மேல் சென்றால் முதல் 100 யூனிட் இலவசம். 101 லிருந்து 200 யூனிட் வரைக்கும் ரூ.3.5,
201 லிருந்து 500 யூனிட் வரைக்கும் ரூ.4.6, 500 யூனிட்டுக்கு மேல் எவ்வளவு யூனிட் செலவிட்டு இருந்தாலும் அதற்கு ரூ.6.6 வசூலிக்கப்படுகிறது.

EB Bill Calculator App Link : https://bit.ly/3eY1qG3

மேலும் இதைப் பற்றி விரிவாக காண கீழ்காணும் வீடியோவை முழுவதும் பாருங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *