கூகுள் பிளே ஸ்டோரிலிருந்து பேடிஎம் அப்ளிக்கேஷன் அதிரடி நீக்கம்! காரணம் என்ன?

இந்தியாவில் Payment Wallet அப்ளிகேஷன்களில் முன்னணி நிறுவனமாக கருதப்படுவது Paytm, தற்போது சில Gamling , Casino விளையாட்டுகளில் தனது பயனாளர்களை திசை திருப்பியதற்காக கூகுள் தனது ப்ளே ஸ்டோரில் இருந்து அதிரடியாக பேடிஎம் பேமெண்ட் அப்ளிகேஷனை நீக்கியுள்ளது.

இருந்தாலும் Paytm Money , Paytm Mall, Paytm Business போன்ற அப்ளிகேஷன்கள் ப்ளே ஸ்டோரில் இருந்து நீக்கப்படவில்லை.

இதனிடையே இது சம்பந்தமாக பேடிஎம், தற்போது Twitter யில் தெரிவித்திருப்பதாவது,

தற்காலிகமாக பேடிஎம் அப்ளிகேஷனை கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து பதிவிறக்கம் மற்றும் அப்டேட் செய்ய இயலாது. ஆனால் ஏற்கனவே இன்ஸ்டால் செய்து பயன்படுத்தும் பேடிஎம் பயனாளர்கள் அனைவரும் தொடர்ந்து பேடிஎம் அப்ளிகேஷனை எந்த ஒரு இடையூறும் இல்லாமல் பயன்படுத்தலாம், மேலும் உங்களுடைய பணம் அனைத்தும் பத்திரமாகவே உள்ளது என கூறியுள்ளது.

பேடிஎம் அப்ளிகேஷன் ஆப்பிள் ஸ்டோரில் தொடர்ந்து இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *