பத்தாம் வகுப்பு தேர்வு முடிவு வெளியீடு | வரலாற்றில் முதல்முறையாக மாணவிகளை விட மாணவர்கள் அதிக அளவில் தேர்ச்சி.

கடந்த மார்ச் 27ஆம் தேதி நடக்கவிருந்த பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு Corona காரணமாக ரத்து செய்யப்பட்டது. இதன் மூலம் பத்தாம் வகுப்பு மாணவர்கள் அனைவருக்கும் 100% தேர்ச்சி என்று மாநில அரசு அறிவித்தது.

இதன் மதிப்பெண் பட்டியல் ஆனது இன்று 10.08.20 காலை 9.30 மணி அளவில் வெளியிடப்பட்டது.  இதனை

www.dge1.tn.nic.in
www.tnresults.nic.in
www.ge2.tn.nic.in

என்ற இணைய தளங்களில் சென்று உங்கள் Register Number மற்றும் Date of Birth ஆகியவற்றை உள்ளிட்டு உங்கள் மதிப்பெண் பட்டியலை பதிவிறக்கிக்கொள்ளலாம். மேலும் உங்களது கைபேசியிலும் இந்த மதிப்பெண் பட்டியல் ஆனது அனுப்பப்பட்டிருக்கும் அதன் மூலமும் பார்த்துக்கொள்ளலாம்.

வரலாற்றில் முதல்முறையாக மாணவிகளை விட மாணவர்கள் அதிக அளவில் தேர்ச்சி.

பத்தாம் வகுப்பு தேர்வை மொத்தம் 939829 மாணவ மாணவியர்கள் 

தேர்வு எழுத இருந்தனர். இதில் 471759 மாணவர்களும், 468070 மாணவிகளும் அடங்குவர். தற்போது அனைவரும் தேர்ச்சி என்ற அறிவிப்பால் வரலாற்றில் முதல்முறையாக மாணவிகளை விட மாணவர்கள் அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர். ஏதேனும் மதிப்பெண் குறைபாடுகள் இருப்பின் அதனை உங்கள் பள்ளி தலைமையாசிரியரின் வாயிலாக ஆகஸ்ட் 17- 25 வரை விண்ணப்பிக்கலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *