உங்களுடைய மொபைல் கேமராவை எப்படி கணினியில் WebCam – ஆக பயன்படுத்துவது?

பலர் கணினியில்  இருந்து Live Stream செய்யும்போதோ அல்லது வீடியோ கால் பேசும்போது, External ஆக Webcam  வாங்கி பயன்படுத்துவார்கள். ஆனால்  அதற்கு பதிலாக இனி உங்கள் மொபைல் போனில் உள்ள கேமராவையே கணினியுடன் Connect செய்து சுலபமாக Webcam ஆக பயன்படுத்தலாம் .

இதற்கு  Droidcam மென்பொருள் பயன்படுகிறது. 
முதலில் கீழ்காணும் லிங்கில் சென்று இந்த மென்பொருளை உங்கள் மொபைல் மற்றும் கணினியில் பதிவிறக்கி கொள்ளுங்கள்.

Droidcam Mobile –  Download
Droidcam PC – Download

முதலில் உங்கள் மொபைலில் Wifi ஆன் செய்து கொண்டு, பின்பு Install செய்த Driodcam மொபைல் அப்ளிகேஷனை ஓபன் செய்து கொள்ளவும். இதில் காட்டப்படும் Wifi IP மற்றும் PORT நம்பர்களை குறித்து கொள்ளவும்.

பின்பு உங்கள் கணினியில் Install செய்த DroidCam மென்பொருளை ஓபன் செய்து Wifi IP மற்றும் PORT நம்பரை உள்ளிட்டு கனெக்ட் செய்தால் உடனே உங்கள் மொபைல் கேமராவை தற்போது கணினியில் காணலாம்.
குறிப்பு :  உங்கள் கம்ப்யூட்டர் மற்றும் மொபைல் ஒரே wi-fi நெட்வொர்க்கில் Connect  ஆகிருக்க வேண்டும் 
மேலும் Wifi இல்லாமல் USB Data கேபிள் வழியாகவும் பயன்படுத்தலாம் .

மேலும் இதை எப்படி Live Stream மென்பொருளில் காண்பது என்பது பற்றிய முழு விளக்கம் கீழ்காணும் வீடியோவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *