நாடு முழுவதும் ஒரே அவசர உதவி எண் அமலுக்கு வருகிறது

அமெரிக்காவில் எந்த ஒரு அவசர உதவி தேவைப்பட்டாலும் 911 என்ற எண்ணிற்கு அழைத்து உதவி பெறலாம். ஆனால் இந்தியாவில் ஒவ்வொரு துறைக்கும் ஒவ்வொரு அவசர உதவி எண் இருந்து வந்தது போலீஸ் உதவி எண் 100 , தீயணைப்பு 101 , ஆம்புலன்ஸ் 108 என ஒவ்வொரு துறைக்கும் வெவ்வேறு அவசர உதவி எண் இருந்து வந்தது.

அவசர உதவி எண் 112

இந்த நிலையில் இனி நாடு முழுவதும் ஒரே அவசர உதவி எண் அமலுக்கு வருகிறது. போலீஸ், தீயணைப்பு , ஆம்புலன்ஸ், பெண்களுக்கு எதிரான வன்முறை போன்ற எந்த உதவி தேவைப்பட்டாலும் 112 என்ற எண்ணிற்கு அழைத்தாலே போதுமானது. இந்த சேவையானது தமிழ்நாடு உள்ளிட்ட 14 மாநிலங்களில் வரும் பிப்ரவரி 19 அன்று முதல் அமலுக்கு வருகிறது. இந்த சேவையினை எந்த போனில் இருந்தும் அழைத்து பெறலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் வீடியோ வடிவில் எங்களுடைய பதிவுகள் உங்களுக்கு வந்து சேர யூட்யூபில் TECH POST சேனலை Subscribe செய்து கொள்ளுங்கள். இந்தப் பதிவானது உங்களுக்குப் பிடித்திருந்தால் கீழ்காணும் ஷேர் பட்டனை அழுத்தி உங்களுடைய நண்பர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்.

,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *