உங்களுடைய வாட்ஸப் ஹேக்கிங்கில் இருந்து தப்பிப்பது எப்படி?

Whatsapp செயலியானது தற்போது அனைவரும் அன்றாடம் பயன்படுத்தும் ஒரு செயலியாக உருவெடுத்துள்ளது. இந்தநிலையில் நமக்கே தெரியாமல் நம்முடைய Whatsapp தரவுகளை மற்றவர்கள் பயன்படுத்தி வருகின்றனர். இதனை எப்படி கண்டுபிடிப்பது மற்றும் இதில் இருந்து எப்படி நம் தற்காத்துக்கொள்வது என்பதை இப்பதிவில் காண்போம்.

முதலில் உங்களுடைய வாட்ஸப் தரவுகளை மற்றவர்கள் படிக்க 2 முக்கிய வழிகள் உள்ளன

Whatsapp Web

Whatsapp Web ஆனது நாம் சுலபமாக வாட்ஸ் அப்பை கணினியில் பயன்படுத்துவதற்காக உருவாக்கப்பட்டதாகும். Whatsapp செயலியில் உள்ள
QR Code – ஐ கணினியில் ஸ்கேன் செய்வது மூலமாக நாம் மொபைலில் உள்ள தரவுகளை அப்படியே கணினியிலும் காண இயலும். அதுமட்டுமில்லாமல் நம் கணினியிலிருந்து மற்றவர்களுக்கும் மெசேஜ்களை அனுப்ப இயலும். ஒரு சில நேரங்களில் நாம் மற்றவர்களது கணினியிலோ அல்லது Browsing சென்டர்களில் இதுபோல் QR Code பயன்படுத்தி நாம் வாட்ஸ் அப்பை உபயோகிக்கும்போது அதை Logout செய்யாமலே வந்து விடுவோம். இந்த நிலையில் அதே கணினியை பயன்படுத்தும் மற்றொருவர் இந்த Whatsapp Web தளத்திற்கு செல்லும் போது உங்களுடைய மொபைலில் இன்டர்நெட் இருந்தாலே போதும் உங்களுடைய வாட்ஸப் தரவுகளை வேறு ஒருவர் அந்தக் கணினியில் காண இயலும்.

தடுப்பது எப்படி?

இதைத் தடுப்பதற்கு உங்களுடைய வாட்ஸப் மொபைலில் Whatsapp Web ஆப்ஷனில் செல்லுங்கள். இதில் நீங்கள் கடைசியாக எந்தெந்த கணினியில் Whatsapp Web – னை பயன்படுத்தியுள்ளீர்கள் என காட்டும். அதில் உங்களுடைய கணினி தவிர மற்ற கணினிகள் இருந்தால் அதை கிளிக் செய்து Logout செய்துவிடுங்கள்.

மொபைல் எண் மூலம்

உங்களுடைய சிம் கார்டு அல்லது மொபைல் மற்றவர்களுக்கு கிடைத்தாலே போதும் அந்த சிம் கார்டினை அவர்களது மொபைலில் பொருத்தி உங்களுடைய வாட்ஸப் தரவுகளை காண இயலும்.

தடுப்பது எப்படி?

உங்களுடைய சிம் கார்டு தொலைந்து விட்டால் உடனே புதிய சிம் கார்டு வாங்குங்கள் அல்லது அந்த சிம்கார்டை பிளாக் செய்து விடுங்கள். முன்னதாகவே பாதுகாப்பதற்கு
உங்களுடைய வாட்ஸ் அப்பில் Setting>Account>Two-step Verification சென்று 6 இலக்க PIN நம்பர் மற்றும் உங்களுடைய ஈமெயில் முகவரியை கொடுத்து பாதுகாத்துக் கொள்ளுங்கள் இதன் மூலம் உங்களுடைய சிம்கார்டு மற்றவர்களுக்கு கிடைத்தால் கூட அவர்கள் அந்த நம்பரில் Whatsapp Install செய்யும் போது இந்த PIN நம்பர் இருந்தால் மட்டுமே Whatsapp உபயோகிக்க இயலும்.


மேலும் வீடியோ வடிவில் எங்களுடைய பதிவுகள் உங்களுக்கு வந்து சேர யூட்யூபில் TECH POST சேனலை Subscribe செய்து கொள்ளுங்கள். இந்தப் பதிவானது உங்களுக்குப் பிடித்திருந்தால் கீழ்காணும் ஷேர் பட்டனை அழுத்தி உங்களுடைய நண்பர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *